நீரிழிவுப் பாதிப்பிலான கால் வலியால் அவதியா?
நீரிழிவுப் பாதிப்பிலான கால் வலி என்பது நீரிழிவு நோயாளிகளைப் பெரிதும் பாதிக்கும் பொதுவான பிரச்சனை ஆகும். நீரிழிவு நோயாளிகளில் நான்கில் ஒருவருக்கு, இந்தக் கால் வலி உணர்வு ஏற்படுகிறது. இந்த அசவுகரியத்தைத் தவிர்ப்பதற்கும், வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்துவதற்கும், முறையான நீரிழிவு பாதிப்பிலான கால் வலி நிவாரணம், முக்கியமானதாக உள்ளது.
நீரிழிவுப் பாதிப்பிலான கால் வலிக்கான காரணங்கள்
இரத்தத்தில் அதிகச் சர்க்கரை இருக்கும் நிகழ்வானது, நீரிழிவு நோயாளிகளின் நரம்புகள் மற்றும் ரத்த நாளங்களைச் சேதப்படுத்துகின்றன. கால்களில் உள்ள ரத்த நாளங்கள் மற்றும் நரம்புகளில் சேதங்கள் ஏற்படும்போது, அது நீரிழிவுப் பாதிப்பிலான கால் வலி மற்றும் மற்ற கால் வலிப் பிரச்சினைகளுக்குக் காரணமாக அமைகின்றன.
நீரிழிவுப் பாதிப்பிலான கால் வலிக்கான நிவாரணம்
கூச்சம், எரிச்சல், உணர்வின்மை, படபடப்பு மற்றும் வலி ஆகியவை நீரிழிவுப் பாதிப்பிலான கால் வலியின் முக்கிய அறிகுறிகள் ஆகும். புற நரம்பியல் தூண்டலால், ஏற்படும் உணர்வே, இந்நிலைக்குக் காரணம் ஆகும். நாள்பட்ட உயர் ரத்த அழுத்த பாதிப்பைப் பொறுத்து, கால்களில் உள்ள நரம்புகள் சேதம் அடைகின்றன. நீரிழிவு நோயாளிகளுக்கு, ரத்த ஓட்டத்தில் பாதிப்பு மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியில் குறைபாடு இருப்பின், அது கால் வலியை மேலும் அதிகரிக்கச் செய்து விடுகின்றன. நோய்த்தொற்றுகளினாலும், நீரிழிவுப் பாதிப்பினால், கால்களில் புண்கள் ஏற்படும் வாய்ப்பு அதிகரிக்கிறது.
மருந்தியல் ரீதியான சிகிச்சைமுறைகள்
நீரிழிவுப் பாதிப்பிலான கால் வலியை நிர்வகிப்பதில், மருந்தியல் சிகிச்சைகளின் பங்கு அளப்பரியதாக உள்ளது. ஒவ்வொருவருக்கும் பாதிப்பின் விகிதம் வேறுபடும் நிலை உள்ளதால், அனைவரும் ஒரே வகையான மருந்தை எடுத்துக்கொள்வது விரும்பத்தகாத விளைவுகளை ஏற்படுத்திவிடும் என்பதால், கால் பாதிப்பிற்குச் சிகிச்சை அளிக்கும் மருத்துவரை நாடி, அவரின் ஆலோசனைக்கு உட்பட்டு, பரிந்துரைத்த மருந்துகளை எடுத்துக் கொள்வது நல்லது.
Naproxen மற்றும் Ibuprofen உள்ளிட்ட ஸ்டீராய்டு கலப்பு இல்லாத அழற்சி எதிர்ப்பு மருந்துகள் (NSAIDs), வீக்கத்தைக் குறைப்பதன் விளைவாக, தற்காலிகமாக நிவாரணத்தை வழங்குகின்றன. இதன்காரணமாக, வலி உணர்வு குறைகிறது. இந்த மருந்துகளுக்கு மாற்றாக, களிம்புகளை, கால் வலி ஏற்பட்ட இடத்தில் தடவுவதன் மூலமாகவும், வலியைக் குறைக்க இயலும்.
Capsaicin கிரீமைப் பயன்படுத்துவதன் மூலம் நரம்புகளில் ஏற்படும் எதிர்மறையான உணர்திறன்களைத் தற்காலிகமாகக் குறைக்க முடியும். இந்தக் கிரீம் பயன்பாடானது, உங்களுக்குத் துவக்கத்தில் கூச்சம் மற்றும் எரிச்சல் உணர்வினை உருவாக்குகிறது. இந்த விளைவுகள், அனைவருக்கும் ஒரேமாதிரி இருப்பதில்லை.
மருந்துகளைத் தவிர்க்கும் வகையிலான சிகிச்சை முறைகள்
மருந்துகளைத் தவிர்க்கும் வகையிலான சிகிச்சை முறைகள், நீரிழிவுப் பாதிப்பிலான கால் வலியை மாற்றுவழிகளில் திறம்பட நிர்வகிக்கின்றன. மருந்துகளின் பயன்பாட்டைக் குறைக்க விரும்புபவர்களுக்கு, இந்தச் சிகிச்சைமுறையானது, சிறந்த தேர்வாக உள்ளது. இந்த அணுகுமுறையில், கால் வலிக்கான அடிப்படைக் காரணங்களை அறிந்து கொள்வதோடு மட்டுமல்லாது, கால் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதிலும் கூடுதல் கவனம் செலுத்தப்படுகிறது.
நடைப்பயிற்சி அல்லது நீச்சல் உள்ளிட்ட வழக்கமான பயிற்சிகள் தசைகளை வலுப்படுத்துவதோடு மட்டுமல்லாது, ரத்த ஓட்டத்தையும் அதிகரிக்கிறது மற்றும் நரம்பியல் வலியையும் குறைக்கிறது.
உடல் சிகிச்சை மற்றும் நீட்சிப் பயிற்சிகள், கால்கள் மற்றும் கணுக்கால்களில் பல்வேறு இயக்கங்களில் நெகிழ்வுத்தன்மையைப் பராமரிக்க உதவுகிறது.
பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு, வெப்பம் அல்லது குளிர்ச் சிகிச்சையைப் பயன்படுத்துவது, நீரிழிவுப் பாதிப்பிலான கால் வலியைக் குறைக்கின்றது.
சூடான குளியல் அல்லது வெப்பமூட்டும் பட்டைகள் ரத்த ஓட்டத்தைச் சீராக்குவதால் தசைகள் தளர்வு நிலையை அடைகின்றன. குளிர்நிலையில் மேற்கொள்ளப்படும் மசாஜ்கள் உள்ளிட்டவை, வீக்கம் மற்றும் உணர்வின்மைப் பாதிப்பைக் குறைக்கவல்லதாக உள்ளன.
இந்தச் சிகிச்சைமுறையின் போது, கால்களில் ஏதாவது இனம்புரியாத உணர்வு ஏற்படும்பட்சத்தில், உடனடியாக மருத்துவரைக் கலந்தாலோசிப்பது நல்லது.
மேலும் வாசிக்க : நீரிழிவு நோயைப் பயணத்தின்போது நிர்வகிப்பது எப்படி?
சிறப்புக் காலணிகள் உரிய பலனை அளிக்கின்றனவா?
நீரிழிவுக் கால் வலியை நிர்வகிக்கப் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட சிறப்புக் காலணிகள் உதவுகின்றன. இவை எலும்புகளுக்குப் பாதிப்பு ஏற்படாமல் தடுத்து, அழுத்த புள்ளிகளைத் தணிக்கின்றன.கால் புண்கள் அல்லது பிற காயங்கள் உருவாகும் ஆபத்தைக் குறைக்கின்றன.
இந்தக் காலணிகள், வழக்கமான காலணிகளைவிட அதிக அகலமாகவும் மற்றும் ஆழமாகவும் இருக்கும். உடல் செயல்பாடுகளின் போது, கால்களில் ஏற்படும் தாக்கத்தை அகற்றும் அம்சங்களைத் தன்னகத்தே கொண்டுள்ளன. சரியான காலணிகளைத் தேர்வு செய்யும் பொருட்டு, நிபுணத்துவம் பெற்ற மருத்துவ வல்லுநர் அல்லது கால்வலி நிபுணருடன் கலந்தாலோசிப்பது நல்லது.
மருத்துவ உதவியை எப்போது நாட வேண்டும்?
நீரிழிவுப் பாதிப்பிலான கால் வலி நிகழ்வின், கீழ்க்கண்ட அறிகுறிகளில் ஏதாவது ஒன்றை எதிர்கொள்ளும்பட்சத்தில், உடனடியாக மருத்துவரைக் கலந்தாலோசிப்பது நல்லது.
உங்கள் பிட்டம், தொடைகள், தசைப்பிடிப்பு
கால்களில் கூச்சம், எரிச்சல் உணர்வுகள், கால்களில் உணர்வின்மை உள்ளிட்ட அசவுகரியம்
கால்களின் வடிவம் காலப்போக்கில் மாறுகிறது.
கால், கால்விரல்கள், கீழ்க் கால்களில் முடி உதிர்தல்
கால்களின் தோல் பகுதி வறண்டு, விரிசல் ஏற்படுதல்
கால்களில் நிலவும் வெப்பநிலை மாறுதலால், அதன் நிறம் மாறுதல்
கால்விரல் நகங்கள் மஞ்சள் நிறம் அடைதல்
பூஞ்சைப் பாதிப்பினால் ஏற்படும் நோய்த்தொற்றுகள்
கால் விரல் இடுக்குகளில் புண், கொப்புளம் உள்ளிட்ட அறிகுறிகள் தென்படும்பட்சத்தில், உடனடியாக மருத்துவரை நாடுவது நல்லது.
நீரிழிவுக் கால்வலி அன்றாட வாழ்க்கையைப் பெரிதும் பாதிக்கிறது. அதனால் ஏற்படும் அசௌகரியங்களைக் குறைக்கக் கால்வலி பராமரிப்பு மிக முக்கியம்.நீரிழிவுப் பாதிப்பிலான கால் வலியை நிர்வகிக்க, திறன்மிக்க மருத்துவ வல்லுநர்களுடன் கலந்தாலோசித்து, அவர்ப் பரிந்துரைத்த வழிமுறைகளைக் கடைப்பிடிப்பது அவசியம் ஆகும்.
நீரிழிவுப் பாதிப்பிலான கால்வலி நிகழ்வை, அதற்கான தக்கப் பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றி, அந்தப் பாதிப்பில் இருந்து முழுவதுமாக நிவாரணம் பெற்று, நல்வாழ்க்கையை வாழ்வோமாக…