நடத்தைப் பொறியியலைப் புரிந்து கொள்வோமா?
பயன்பாட்டு நடத்தைப் பகுப்பாய்வு (ABA) பயன்பாட்டு நடத்தைப் பகுப்பாய்வு (ABA) என்பது மனிதர்களின் நடத்தைகளை மாற்றி அமைப்பதற்கான விஞ்ஞான அடிப்படையிலான அணுகுமுறையாகும். இது அந்த நடத்தைகள் குறித்த மதிப்பீடுகளையும் மேற்கொள்கிறது.இது, நடத்தைப் பொறியியல் என்றும் குறிப்பிடப்படுகிறது. அந்தந்த சூழல்களின் அடிப்படையிலான நடத்தைகளைப் புரிந்துகொள்வதற்கு, இந்த அணுகுமுறையானது, கற்றல் மற்றும் நடத்தைத் தொடர்பான உளவியலின் கொள்கைகளைப் பயன்படுத்துகிறது. இந்த அணுகுமுறையானது, நடத்தை முறைகளைச் சுட்டிக்காட்டுவதினால், நேர்மறையான மாற்றங்களை அனுமதிக்கின்றது. ABA செயல்முறையானது, [...]