அறிவாற்றல் நடத்தைச் சிகிச்சை (CBT) என்றால் என்ன?
அறிவாற்றல் நடத்தைச் சிகிச்சை (CBT) என்பது, மருத்துவரீதியிலான, முதன்மையான உளவியல் சிகிச்சை அணுகுமுறை ஆகும். CBT நமது எண்ணங்கள், உணர்வுகள் மற்றும் நடத்தைகளுக்கு இடையிலான உறவை நிவர்த்தி செய்ய உதவுகிறது. CBT முறை ஆரோக்கியமற்ற சிந்தனைகளை அடையாளம் கண்டு மாற்றுவதோடு, நேர்மறையான சிந்தனையை ஊக்குவிக்கின்றது.
CBT சிகிச்சை என்றால் என்ன?
அறிவாற்றல் நடத்தைச் சிகிச்சை நிகழ்வுகள் எவ்வாறு உணர்வுகளை வடிவமைக்கின்றன என்பதை மையமாகக் கொண்டு செயல்படுகிறது.எதிர்மறையான மற்றும் செயலற்ற நடத்தைகளுக்கு, பகுத்தறிவற்ற எண்ணங்களே காரணமாகும் வாய்ப்பும் மிக அதிகளவில் உள்ளன. அறிவாற்றல் சார்ந்தச் செயல்முறைகள் குறித்த நுண்ணறிவைப் பெற உதவுவதோடு மட்டுமல்லாது, ஆரோக்கியமான நடத்தை முறைகளை வகுக்க வழிவகுக்கிறது.
பயன்கள்
மனநலம் சார்ந்த ஆரோக்கியச் சவால்களை முறியடிக்கும் வகையிலான பல்வேறு பயன்பாடுகளை, அறிவாற்றல் நடத்தைச் சிகிச்சைத் தன்னகத்தே பெற்று உள்ளது. நமது சிந்தனைகள், உணர்வுகள் மற்றும் செயல்பாடுகள் ஒவ்வொன்றும் தொடர்புடையவை ஆகும். இந்தச் சிகிச்சை முறையானது, தனிநபர்களின் அறிவாற்றலைப் புரிந்துகொள்ள உதவுவதோடு, அவர்களின் மேம்பட்ட நல்வாழ்விற்காக, உணர்வுகள் மற்றும் தகவமைப்பு நடத்தைகளில் முன்னேற்றம் காண வைக்கின்றன.
மேலும் வாசிக்க : தெளிவான மனநிலையை உருவாக்கும் பயிற்சிகள்
எங்கு எங்கெல்லாம் பயன்படுத்தப்படுகிறது?
கவலைச் சார்ந்தக் குறைபாடுகள்
குறிப்பிட்ட வகையிலான பயம், கவலைகள் சார்ந்த குறைபாடுகள் உள்ளிட்டவைகளுக்கு, சிகிச்சை அளிக்க, அறிவாற்றல் நடத்தைச் சிகிச்சை முக்கியப் பங்களிப்பு அளிக்கின்றது. மனதில் உள்ள அதிகப்படியான கவலைகளை நிர்வகிக்கவும், அதன் அறிகுறிகளைக் களைவதோடு மட்டுமல்லாது, அதீதக் கவலைகளுக்குக் காரணமான சிந்தனைமுறையை மாற்றி அமைக்கவும், இந்தச் சிகிச்சை முறை உதவுகின்றது.
மனம் சோர்ந்து போதல்
விரக்தியான மனநிலை மற்றும் நம்பிக்கையின்மைக்குக் காரணமாக அமையும் எதிர்மறைச் சிந்தனைகளை மாற்றி அமைப்பதன் மூலம், மனம் சோர்ந்து போவதில் இருந்து, நாம் நம்மைத் தற்காத்துக் கொள்ள முடியும். இதற்கு, அறிவாற்றல் நடத்தைச் சிகிச்சை, பெரிதும் உதவுகிறது. எதிர்மறையான சிந்தனைகள் மற்றும் உணர்வுகளை, நேர்மறைத் தன்மையினதாக மாற்றுவதன் மூலம், மனச்சோர்வு அறிகுறிகளில் இருந்து விடுதலைப் பெற இயலும்.
மன உளைச்சல் குறைபாடுகளுக்குப் பிந்தைய நிலை
அதிர்ச்சியான சம்பவங்கள், மன உளைச்சலுக்கு முக்கியக் காரணமாக அமைகின்றன. இத்தகைய சம்பவங்களை எதிர்கொள்ளத் தேவையான மனநிலையை வழங்குவதோடு மட்டுமல்லாது, அதுதொடர்பான இன்னல்களைக் களையவும், அறிவாற்றல் நடத்தைச் சிகிச்சை முக்கியப் பங்காற்றுகின்றன.
உணவுமுறைச் சார்ந்தக் குறைபாடுகள்
ஆரோக்கியமற்ற உணவுப்பழக்க வழக்கங்கள், உடல் அமைப்பில் வேறுபாடு மற்றும் உணவு தொடர்பான பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண, அறிவாற்றல் நடத்தைச் சிகிச்சைப் பேருதவி புரிகிறது.
போதைப் பொருளுக்கு அடிமையாதல்
போதைப் பொருட்களுக்கு அடிமையாக உதவும் சிந்தனைகளை அடையாளம் காண்பதற்கும், அதுதொடர்பான சிந்தனைகளை மாற்றி அமைக்கவும் இந்தச் சிகிச்சை முறை உதவுகிறது.
உறக்கமின்மை
உறக்கமின்மைக் குறைபாட்டால் அவதிப்படுபவர்கள், உறக்க நிகழ்வுகளில் அவர்களுக்கு உள்ள பிரச்சினைகளை அறிந்து களையவும் மற்றும் தரமான உறக்கத்திற்கு உகந்த சூழலை ஏற்படுத்தவும், இந்தச் சிகிச்சை முறை உதவுகிறது.
கோபத்தைக் கட்டுப்படுத்துதல்
ஒருவர் அதிகம் கோபப்படுகிறார் என்றால், அதற்கான மூலக்காரணங்கள், அவரின் சிந்தனைமுறைகள் உள்ளிட்டவைகளைக் கண்டறிந்து, ஆரோக்கியமான முறையில், கோபத்தைக் கட்டுப்படுத்த, அறிவாற்றல் நடத்தைச் சிகிச்சை உதவுகிறது.
மன அழுத்தத்தை நிர்வகித்தல்
மன அழுத்தத்தை அடையாளம் காணவும், அது தொடர்புடைய சிந்தனைகளை மறுஆய்வு செய்யவும், அதைத் தவிர்க்கும் உத்திகளை வகுக்கவும் அறிவாற்றல் நடத்தைச் சிகிச்சை உதவுகிறது.
சுயமரியாதை மேம்படல்
அறிவாற்றல் நடத்தைச் சிகிச்சையின் மூலம், மனதில் உள்ள எதிர்மறையான எண்ணங்களை மாற்றி அமைப்பதன் மூலம், சுயமரியாதை மற்றும் தன்னம்பிக்கை அதிகரிக்கின்றது.
நுட்பங்கள்
எதிர்மறையான மற்றும் செயல்தன்மை அற்ற சிந்தனை முறைகளை மறுசீரமைப்புக்கு உட்படுத்துவது மற்றும் அதுதொடர்பான நடத்தைகளை மாற்றி அமைப்பது உள்ளிட்டநோக்கங்களைக் கொண்ட நுட்பங்களை, அறிவாற்றல் நடத்தைச் சிகிச்சையானது தன்னகத்தே கொண்டுள்ளது.
அறிவாற்றல் சார்சீரமைப்பு
எதிர்மறையான சிந்தனைமுறைகளை அடையாளம் கண்டு, அதனை நேர்மறைச் சிந்தனைகளாக மாற்றி அமைக்க, அறிவாற்றல் சார்சீரமைப்பு நுட்பம் உதவுகிறது. இது ஆரோக்கியமான பதில் நடவடிக்கைகளுக்குக் காரணமாக அமைகின்றது.
நடத்தைகளை நிர்வகித்தல்
மகிழ்ச்சியாக ஒரு விசயங்களில் செயல்படும் வகையில் மனநிலையை அல்லது நடத்தையை மேற்கொள்வதில், இந்த நுட்பம், முக்கியப்பங்கு வகிக்கின்றது. ஒரு குறிப்பிட்ட நபரின் செயல்படாத் தன்மை மற்றும் அவர் தனிமையில் இருக்கும் சூழலை அகற்றுவதன் மூலம், அவரின் மனநிலையை மேம்படச் செய்ய முடியும்.
வெளிப்படுத்தும் சிகிச்சை
கவலைகள் சார்ந்தக் குறைபாடுகளில் இந்தச் சிகிச்சை முறையானது பயன்படுத்தப்படுகிறது. இது குறிப்பிட்ட நபர்களை, அவர்கள் பயப்படும் சூழல்கள் மற்றும் அதற்கான தூண்டுதல்களிலிருந்து முதலில் வெளிக்கொணர உதவுகிறது. இதன்மூலம், அவர்கள் கவலைகளுக்கான உணர்வுகளை மறப்பதோடு மட்டுமல்லாது. கவலைகளைச் சமாளிக்கும் வகையிலான ஆரோக்கியமான வழிமுறைகளையும் அறிந்து கொள்கின்றனர்.
சிந்தனைகளின் பதிவுகள்
இது எதிர்மறையான சிந்தனைகளை வேரறுக்க உதவுவதோடு மட்டுமல்லாது, அவைத் தொடர்பான உணர்வுகளையும் அடையாளம் காண உதவுகிறது. இந்தச் செயல்முறையானது, சிந்திக்கும் நெறிமுறையைச் செம்மைப்படுத்துவதால் ஏற்படும் பலன்கள் குறித்த தெளிவை ஏற்படுத்துகின்றது.
பிரச்சினைகளைத் தீர்க்கும் திறன்
சவால்களைச் சரியான முறையில் எதிர்கொண்டு, அதன்மூலம், பிரச்சனைகளை எளிதாகத் தீர்ப்பதற்கான வழிமுறையை ஊக்குவிக்கிறது. இது கவலை உள்ளிட்ட எதிர்மறைத் தாக்கங்களைக் குறைக்க உதவுகிறது.
ஆழ்ந்த சுவாசம், ஞாபகச் சக்தி போன்ற நுட்பங்கள் மன அழுத்தத்தைக் குறைக்கவும், சுய விழிப்புணர்வை அதிகரிக்கவும் உதவுகின்றன.
நன்மைகள்
அறிவாற்றல் நடத்தைச் சிகிச்சை முறையில் மேற்கொள்ளப்படும் நுட்பங்கள், சிகிச்சைகளுக்குத் தீர்வு அளிப்பது மட்டுமல்லாது, தினசரி வாழ்க்கையிலும், மனநலனை மேம்படுத்தும் வகையில் உள்ளது.
ஆதாரங்கள் மற்றும் கட்டமைக்கப்பட்ட அணுகுமுறை உள்ளிட்டவைகளின் அடிப்படையில், இந்தச் சிகிச்சை முறையானது முன்னிலை வகிக்கின்றது.
அறிவாற்றல் நடத்தைச் சிகிச்சை முறையானது, மனநலச் சிகிச்சையில், மாற்றங்களுக்கான வழிகாட்டியாக விளங்குகின்றது. நடைமுறையிலான நுட்பங்கள் மற்றும் உத்திகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிப்பதன் மூலம், நல்வாழ்க்கையை நம்வசப்படுத்துகிறது.