IVF சிகிச்சையின் வெற்றி விகிதம் அறிவோமா?
கருத்தரிப்பு நிகழ்வு என்பது நாம் நினைப்பது போன்று, சாதாரண நிகழ்வாக இருப்பது இல்லை. கருவுறாமை நிகழ்வின் வலி என்பது, நம்மைவிட, தம்பதிகளைத் தான் அதிகளவில் பாதிக்கிறது. குழந்தைப்பேறு என்பது எல்லோருக்கும் எளிதாகக் கிடைத்து விடுவதில்லை. அதுவும் இன்றைய வாழ்க்கைச் சமநிலை இல்லாத காலத்தில், இயற்கை முறையிலான பிரசவம் என்பது அரிதினும் அரிதான நிகழ்வாக மாறி உள்ளது.
இன்றைய இளைய தலைமுறையினருக்குக் குழந்தைப்பேறு அரிதான நிகழ்வாக மாறி உள்ளது. இந்நிலையில், மருத்துவத் துறையில் மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சியின் விளைவாகக் கிடைத்த IVF எனப்படும் செயற்கைக் கருத்தரிப்பு முறை அவர்களுக்கு இனிய வரப்பிரசாதமாக அமைந்துள்ளது.IVF நிகழ்வானது, நீண்ட, நெடிய செயல்முறைகளைக் கொண்டு உள்ளது. இது நிறைவடைய 6 முதல் 8 வாரக் கால அளவுகள் தேவைப்படும்.
IVF நிகழ்வில், அதன் முதல் சுற்றிலேயே வெற்றி வாய்ப்பு உள்ளபோதிலும், அதன் நிலைத்தன்மை என்பது, வயது, வாழ்க்கைமுறை, கருமுட்டையின் தரம், விந்து, கரு உள்ளிட்டவைகளைப் பொறுத்து அமைகின்றது.
IVF சிகிச்சையில் முதல்முயற்சியிலேயே வெற்றி விகிதம் நிர்ணயிப்பதில், வயது முக்கியப் பங்கு வகிக்கின்றது. தம்பதி 35 வயதிற்கு உட்பட்டு இருப்பின், IVF சிகிச்சையின் முதல்முயற்சியிலேயே அவர்களின் வெற்றி விகிதம் 55 சதவீதமாக இருக்கும்.
IVF சிகிச்சையில் முதல்முயற்சியிலேயே வெற்றி விகிதம்
முதல் முயற்சியிலேயே IVF சிகிச்சை வெற்றி விகிதம் என்பது, பெண்ணின் வயதைப் பொறுத்து அமைகின்றது. 35 வயதிற்கு மேற்பட்ட பெண்களுடன் ஒப்பிடும்போது, 35 வயதிற்கு உட்பட்ட பெண்களுக்கு, கருத்தரித்தல் வாய்ப்பு அதிகமாக உள்ளது. வயது அதிகரிக்க, அதிகரிக்க, பெண்களின் கருத்தரிப்பு விகிதம் குறைகின்றது. 35 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு, முதல் முயற்சியிலேயே IVF சிகிச்சை வெற்றி விகிதம் மிகவும் குறைவான அளவிலேயே உள்ளது.
IVF வெற்றிவிகிதத்தில் வயதின் பங்களிப்பு
40 வயதிற்கு மேற்பட்ட பெண்களுக்கு, செயற்கைக் கருத்தரிப்புமுறையில் குழந்தைப்பேறு அமைய 7 சதவீத அளவிற்கே வாய்ப்புகள் உள்ளன. 40 வயதிற்கு மேற்பட்ட பெண்கள், செயற்கைக் கருத்தரிப்பு நிகழ்விற்கு உட்படுத்தப்படும் போது, மருத்துவர்கள், அந்தப் பெண்ணின் கருமுட்டைகளைத் தவிர்த்து, கருமுட்டைகளை, மற்றவர்களிடமிருந்து தானமாகப் பெற்று, அதனைக் கருத்தரித்தலுக்கு உட்படுத்துகின்றனர்.
IVF சிகிச்சையின் வெற்றிவிகிதத்தைப் பாதிக்கும் காரணிகள்
IVF சிகிச்சையின் வெற்றி விகிதம், வயதைப் பொறுத்து அமைகின்றது என்று அறிந்துகொண்ட நிலையில், வெற்றிவிகிதத்தைப் பாதிக்கும் வகையிலான மற்ற காரணிகள் குறித்தும் தெரிந்து கொள்வோம்.
கருமுட்டைகளின் தரம்
விந்தின் தரம்
கருவின் தரம்
வாழ்க்கைமுறை
கருப்பைச் சூழல்
IVF சிகிச்சையின் வெற்றிவிகிதத்தை அதிகரிக்கும் வழிமுறைகள்
முதல் சுழற்சியிலேயே, IVF சிகிச்சையின் வெற்றிவிகிதத்தை அதிகரிக்க வேண்டும் எனில் கருமுட்டை, விந்து கட்டாயம் மேம்பட்டதாக இருக்க வேண்டும். அதுமட்டுமல்லாது,
கருவுறுதலை ஊக்குவிக்கும் வகையிலான சப்ளிமெண்ட்களை எடுத்துக்கொள்ள வேண்டும்.
போதிய அளவிலான உறக்கம் அவசியம்.
மன அழுத்தம் இல்லாத நிலை.
புகை மற்றும் மதுப்பழக்கத்தை உடனடியாக நிறுத்த வேண்டும்.
உடற்பயிற்சிகள் மேற்கொள்வதை வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும்.
BMI அளவைச் சரியான அளவிற்குப் பராமரிக்க வேண்டும்.
கருப்பைப் பிரச்சினைகள் இருப்பின் உடனடியாகச் சரிசெய்துகொள்ள வேண்டும்.
கருப்பைப் புறணிப்பகுதியை வலுப்படுத்துதல்.
IVF முதல் சுழற்சி தோல்வியடைந்தால்..
செயற்கைக் கருத்தரிப்பின் முதல் சுழற்சி தோல்வியடைந்தால் மனம் தளர வேண்டாம்.அடுத்தடுத்த சுழற்சிகளை மேற்கொண்டு, கருத்தரிப்பைச் சாத்தியமாக்க முடியும்.
வயது | முதல் கரு பரிமாற்றத்திற்கான நேரடி பிறப்புகள் சதவீதத்தில் | இரண்டாவது கரு பரிமாற்றத்திற்கான நேரடி பிறப்புகள் சதவீதத்தில் |
35 வயதிற்குள் | 41.4 | 47 |
35 முதல் 37 | 31.6 | 44.7 |
38 முதல் 40 | 22.3 | 40.9 |
கருத்தரித்தல் நிகழ்வைச் சாத்தியமாக்க, IVF சிகிச்சையில் தொடர்ந்து பல்வேறு சுழற்சிகளை மேற்கொள்வது என்பது ஒன்றும் தவறான நடவடிக்கை இல்லை என்று மருத்துவர்கள் தெரிவித்து உள்ளனர்.
சிறந்த IVF மையத்தைத் தேர்ந்தெடுத்தல்
IVF சிகிச்சையானது வெற்றி நிகழ்வாக மாற, சிறந்த IVF மையம் அல்லது நிபுணத்துவம் பெற்ற மகப்பேறியல் மருத்துவரின் வழிகாட்டுதல் அவசியம் ஆகும்.
IVF மையங்கள் மற்றும் நிபுணத்துவம் பெற்ற மகப்பேறியல் மருத்துவர்கள் தேவையான பயிற்சிகளையும், சிகிச்சைக்குத் தேவையான கட்டமைப்பு வசதிகளையும், குறைந்தது 5 ஆண்டுகளுக்கு மேலான அனுபவத்தையும் பெற்றிருக்க வேண்டும்.
IVF மையங்கள் மற்றும் நிபுணத்துவம் பெற்ற மகப்பேறியல் மருத்துவர்களின் பணி என்பது மலட்டுத்தன்மைப் பாதிப்பிற்கு, சோதனை முடிவுகளின் அடிப்படையிலான சிகிச்சை அளிப்பதோடு மட்டுமல்லாது, அத்தம்பதிகளுக்குச் சிகிச்சைக்காலம் முழுமைக்கும், ஆதரவுக்கரம் நீட்ட வேண்டும்.
IVF ஆலோசனையின் எதிர்பார்ப்புகள் என்ன?
IVF ஆலோசனையில் நோயாளியின் முந்தைய மருத்துவ வரலாறு மற்றும் சோதனை முடிவுகள் ஆய்வு செய்யப்படும்.மேலும் அவர்கள் கருத்தரிப்பு நிகழ்விற்கு ஆயத்தமாக உள்ளனரா என்பதை அறிய அவர்களுக்கு ரத்த சோதனை, விந்தணு பரிசோதனை, கருப்பை இருப்பு சோதனை, அல்ட்ராசவுண்ட் ஸ்கேன் சோதனைகள் உள்ளிட்ட சோதனைகள் மேற்கொள்ளப்படும்.
மேலும் வாசிக்க : தனிப்பட்ட ஆரோக்கியத்தில் AI நுட்பத்தின் நன்மைகள்
IVF சுழற்சிகளின் வெற்றி விகிதம்
தம்பதிகளிடையே மேற்கொள்ளப்படும் ஆரம்பகட்ட உடல் பரிசோதனையில் இருந்து துவங்கி, கர்ப்ப சோதனை வரையிலான செயல்பாடுகளில், தாய் எப்போதும் தனிமை நிலையில் இல்லை என்ற உறுதியை, அவர்களுக்கு அளிக்கின்றோம். சிலருக்கு முதல் சுழற்சியிலேயே, கருத்தரிப்பு நிகழ்ந்துள்ளது. மேலும் சிலருக்கு இரண்டு அல்லது மூன்றாவது சுழற்சிகளில், கருத்தரிப்பானது சாத்தியமாகி உள்ளது.
IVF சிகிச்சையின் வெற்றியை மேம்படுத்த உதவும் காரணிகள் குறித்த புரிதலை, தம்பதிகளுக்கு உணர்த்துகிறோம். அதேநேரத்தில், கருத்தரிப்பிறகான வாய்ப்புகளை, திறம்பட அதிகரிக்கும் வகையிலான வழிகளையும் அவர்களுக்குப் பரிந்துரைச் செய்வதாக, சென்னையில் உள்ள முன்னணி செயற்கைக் கருத்தரிப்பு மையத்தின் மருத்துவர்க் குறிப்பிட்டு உள்ளார்.
ராஜேஷ் – பிரியா தம்பதியின் வெற்றிக்கதை
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையைச் சேர்ந்த ராஜேஷ் – பிரியா தம்பதிக்கு, திருமணமாகி 11 ஆண்டுகளாகக் குழந்தை இல்லாதது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.இந்த 11 ஆண்டுகள் காலத்தில், பிரியாவிற்குப் பலமுறை அபார்ஷன் ஆகி உள்ளது.
பிரியாவிற்கு, எண்டோமெட்ரியம் மிகவும் மெல்லிய அளவினதாக இருந்ததன் காரணத்தினால், கரு, கருப்பைச் சூழலில் வளர முடியாத நிலை ஏற்பட்டதனாலேயே, அவருக்கு அடிக்கடி கருச்சிதைவு ஏற்பட்டு வந்தது சோதனையில் கண்டறியப்பட்டது.
மும்பையில் உள்ள முன்னணி செயற்கைக் கருத்தரிப்பு மையத்தில் அவர்கள் மேற்கொண்ட சோதனைகள், அந்த மையம் பரிந்துரைத்த வழிமுறைகளைக் கவனமாகப் பின்பற்றியதன் விளைவாக, அவர்களுக்குக் குழந்தைப் பிறந்து உள்ளது.
கருத்தரித்தலில் பாதிப்பு உள்ளவர்கள், சரியான செயற்கைக் கருத்தரிப்பு மையத்தை அணுகி, மருத்துவர்கள் பரிந்துரைக்கும் வழிமுறைகளைச் சிரத்தையுடன் மேற்கொண்டு, முதல் சுழற்சி பலன் தரவில்லை எனில், சோர்ந்துபோகாமல், அடுத்தடுத்த சுழற்சிகளில், உங்களுக்கென்று பேர்ச் சொல்ல, ஒரு வாரிசைப் பெற்றெடுக்க வாழ்த்துகிறோம்…