பொருள் துஷ்பிரயோகப் பயன்பாட்டுச் சிகிச்சையின் அவசியம்
உங்களின் வாழ்க்கையில் மற்றவர்களின் ஆதரவு இருக்கும்வரைப் பொருள் துஷ்பிரயோகப் பயன்பாட்டுப் பாதிப்புகளுக்கு (SUDs) சிகிச்சை அளிப்பது எளிமையான நிகழ்வாக உள்ளது. உங்கள் குடும்பத்தினர், நண்பர்கள், உங்கள் பயணத்தில் உங்களுக்கு உதவ தேவையான உணர்ச்சிப்பூர்வமான ஆதரவை, உங்களுக்கு வழங்க முடியும்.
இருப்பினும், பாதிப்பில் இருந்து மீட்பதற்கான நிவாரணங்களை மேற்கொள்வதற்கும், மறுபிறப்புக்கான வாய்ப்புகளைக் குறைக்க, தொழில்முறையிலான ஆதரவு என்பது அவசியமாகிறது.
உளவியல் சிகிச்சை
ஒரு நபரின் மனநல நிலைமைகள், உணர்ச்சிரீதியிலான பாதிப்புகளின் அடிப்படைக் காரணங்களில் கவனம் செலுத்த, உளவியல் சிகிச்சை நடைமுறையானது சிறந்த தேர்வாக உள்ளது. இந்தச் சிகிச்சையின் மூலம், பாதிப்புகளின் மூலக் காரணத்தைக் கண்டறிந்து, விரைவில் அதனை நிவர்த்தி செய்ய முடியும். இதன்காரணமாக, அவர்கள், தங்கள் வாழ்க்கையின் தரத்தை மேம்படுத்திக் கொள்ள இயலும்.
சிகிச்சை என்பது நீண்டகால செயல்முறையாக உள்ளது. இதற்கு நோயாளிகளிடமிருந்து, செயலில் ஒத்துழைப்பு மற்றும் அர்ப்பணிப்பு அவசியமானதாக உள்ளது. நோயாளிகள், தாங்கள் மேற்கொள்ளும் சிகிச்சைகளில் இருந்து அதற்கான பலன்களைப் பெற, அவர்களின் எண்ணங்கள், அணுகுமுறைகள், நடத்தை நிகழ்வுகளில் உள்ளிட்டவற்றில், நீண்டகால மாற்றங்களை மேற்கொள்ள ஆயத்தமாக இருக்கவேண்டியது முக்கியத் தேவையாகும்.
பொருள் துஷ்பிரயோகப் பயன்பாட்டுப் பாதிப்புகளுக்கு, உளவியல் சிகிச்சையானது பலன் தருமா?
பொருள் துஷ்பிரயோகப் பயன்பாட்டுப் பாதிப்புகள் என்பவை, போதை மருந்துகள் அல்லது மது வகைகள் மீதான உடல் சார்புநிலைக்கு அப்பாற்பட்டவை ஆகும். இதற்குமேலாக, உளவியல் மற்றும் சமூகக் காரணிகள் அடங்கியுள்ளன.
சில மருந்து வகைகளை, உங்கள் உடல் சார்ந்து இருப்பதைச் சமாளிக்க முடியும் என்றபோதிலும், மன அழுத்தம் உள்ளிட்ட சமூக மற்றும் உளவியல் காரணிகள், மறுபிறப்புக்கான வாய்ப்புகளைத் தூண்டுகிறது. சிகிச்சை நிபுணரின் உதவியுடன், பாதிப்பை நிர்வகிக்கவும், போதைப்பொருள் சார்பை விலக்கவும் வழிமுறைகளைக் கற்றுக்கொள்ளலாம்.
உங்களை நீங்களே நன்றாகப் புரிந்து கொள்ளுங்கள்
உங்களின் தற்போதைய நடத்தை நிகழ்வானது சிந்தனை முறைகள் அனுபவங்கள் மற்றும் நம்பிக்கைகளை எவ்வாறு பாதிக்கும் என்பதை முன்கூட்டியே அறிய, உளவியல் சிகிச்சையானது பேருதவி புரிகிறது. சிகிச்சை நிபுணருடன் நீங்கள் இணைந்து செயல்படும்போது, போதை மருந்துகள் அல்லது மதுவகைகள் மீதான உங்கள் சார்புநிலையின் பங்கு உள்ளிட்டவைகளை நீங்கள் அறிந்து கொள்ளலாம்.
நீங்கள் என்ன காரணத்திற்காக, போதைப்பொருட்களைப் பயன்படுத்துகிறீர்கள் என்பதை நீங்கள் தெரிந்துகொண்டாலே, அந்தப் பழக்கத்தைத் தவிர்க்க உதவும் வழிமுறைகளை, எளிதாக அடையாளம் காண இயலும்.
மேலும் வாசிக்க : குழந்தைகளிடையே காணப்படும் நடத்தைக் குறைபாடுகள்
உங்கள் தூண்டுதல்களை அறிந்து கொள்ளுங்கள்
உங்கள் தூண்டுதல்களை நீங்கள் அறிந்துகொள்ளும்போது, நீங்கள் மறுபிறப்பைத் தவிர்க்க இயலும் என்பதை உறுதிப்படுத்துவது எளிய நிகழ்வாக மாறிவிடுகிகின்றது. உங்கள் தூண்டுதல்கள் என்னென்ன, எந்தெந்த சூழல்கள் மற்றும் இடங்களைத் தவிர்க்க வேண்டும் என்பதை உங்களுக்கு அறிவுறுத்துகிறது. இதன்மூலம், நீங்கள் பாதிப்பை நிர்வகிக்க முடியும் என்பதை உறுதி செய்கிறது.
சிகிச்சை நிபுணருடன் இணைந்து செயல்படும்போது, பாதிப்புக்கான காரணிகளை எளிதில் கண்டறிய முடியும்.சிகிச்சை நிபுணர், இந்தத் தூண்டுதல்களை, நீங்கள் புரிந்துகொள்ள உதவுவது மட்டுமின்றி, அதனைத் தவிர்ப்பதற்கான உத்திகளையும் கையாள உதவுவார்.
தொடர்பு திறன்களை மேம்படுத்துதல்
பொருள் துஷ்பிரயோகப் பயன்பாட்டுப் பாதிப்புகள், பெரும்பாலும் தொடர்பு திறன் மற்றும் சமூகத் திறன்களை வெகுவாகப் பாதிக்கிறது. சிகிச்சையாளருடன் இணைந்து செயல்படும்போது, அது உங்கள் பாதிப்பு நிலையைச் சிறப்பாக நிர்வகிப்பது மட்டுமல்லாது, தொடர்பு மற்றும் சமூகத் திறன்களை மேம்படுத்த உதவுகிறது.
பாதுகாப்பான சூழலில் தொடர்பு திறன்களை மேம்படுத்தும்போது, உங்கள் தன்னம்பிக்கையும் சுயமரியாதையும் உயரும்.
உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரின் ஆதரவு, உங்களுக்கு இருக்கும்போது, அதிலிருந்து நீங்கள் நிவாரணம் பெறுவதற்கான பாதை எவ்வளவு சவாலானது என்பதைச் சிலர்ப் புரிந்துகொள்ளாமல் இருக்கவும் வாய்ப்பு உள்ளது. போதைமருந்துகள் அல்லது மதுவகைகளின் சார்புநிலையை, நீங்கள் சமாளிக்க முடிந்தாலும், அது உங்கள் மீட்புத் திட்டத்தில் உங்களை ஒன்றிணைப்பது கடினமான பணி என்றபோதிலும், அதனை ஊக்குவிக்கிறது.
சிகிச்சை நிபுணர், உங்களுக்குத் தேவையான உந்துதலைக் கண்டறிய உதவுவது மட்டுமல்லாது, சிக்கலான நடத்தைமுறைகளையும் அடையாளம் காண வழிவகுக்கிறார்.
சிகிச்சை நிகழ்வானது, உங்கள் வாழ்க்கையின் அனைத்து அம்சங்களிலும், திறன்களை மேம்படுத்துகிறது. பாதிப்பிலிருந்து மீள்வது என்பது நீண்ட, நெடிய பயணம் ஆகும். உங்களுக்குத் தெரிந்தவர்கள் யாராவது, பொருள் துஷ்பிரயோகப் பயன்பாட்டுப் பாதிப்புடன் போராடிக் கொண்டிருக்கும்பட்சத்தில், அவர் உரிய ஆதரவைப் பெற, நல்ல கைதேர்ந்த சிகிச்சையாளரை நாடுவது சாலச் சிறந்தது.
திறன் வாய்ந்த நிபுணரின் ஆலோசனைக்கு ஏற்ப, சிகிச்சையை மேற்கொண்டு, பொருள் துஷ்பிரயோகப் பயன்பாட்டுப் பாதிப்பில் இருந்து நிவாரணம் பெற்று, நல்வாழ்க்கை வாழ்வோமாக…