நீரிழிவுப் பாதிப்பை நிர்வகிக்க உதவும் கருவிகள்
நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள், தங்களுடைய உடலில் உள்ள சர்க்கரையின் அளவை அவ்வப்போது கண்காணித்துக் கொள்வது அவசியம் ஆகும். இந்தியாவில் 11 பேரில் ஒருவருக்கு நீரிழிவுப் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது. சர்வதேச அளவில், சீனாவிற்கு அடுத்தபடியாக, இந்தியாவில் தான் நீரிழிவு பாதிப்பு நோயாளிகள் அதிகமாக உள்ளனர். 2045ஆம் ஆண்டிற்குள், நீரிழிவுப் பாதிப்பு நோயாளிகளின் எண்ணிக்கை 130 மில்லியனை எட்டும் என்ற அதிர்ச்சித் தகவலை, தேசிய சுகாதார நிறுவனம் வெளியிட்டு உள்ளது.
நீரிழிவு நோயாளிகள், தங்களது சிகிச்சை முறைகளில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். இந்தச் சிகிச்சை முறையில், உணவுமுறை, உடற்பயிற்சி, தொடர்ச்சியான கண்காணிப்புகள் உள்ளிட்டவைகள் அடங்குகின்றன.
நீரிழிவு நோய்க்கான சிகிச்சைகள், கண்காணிப்பு முறைகள் உள்ளிட்டவை மருத்துவமனைகள் உள்ளிட்ட மையங்களிலேயே நடைபெற்று வந்தன. கொரோனா பெருந்தொற்றுக்குப் பிறகு, இச்சிகிச்சை முறைகள் வீட்டிலேயே மேற்கொள்ளப்படுகின்றன. மருத்துவத் துறையில் தொழில்நுட்ப வளர்ச்சியும் அதிகரித்துள்ளது.
குளுக்கோமீட்டர்கள்
குளுக்கோமீட்டர்கள், நீரிழிவுப் பாதிப்பு நோயாளிகளின் ரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் கண்காணிக்கப் பயன்படுகிறது. இதன்காரணமாக, இது நீரிழிவுப் பாதிப்பு நோயாளிகளுக்கு இன்றியமையாத கருவிகளாக மாறி உள்ளன.
முன்பு ரத்த சர்க்கரை அளவைக் கண்டறிய மட்டுமே பயன்பட்ட குளுக்கோமீட்டர்கள், இப்போது நீரிழிவு நிர்வாகத்திலும் முக்கியமானவை.
அனலாக் முறையில் இருந்து டிஜிட்டல்
முன்னொரு காலத்தில் அனலாக் முறையிலான குளுகோமீட்டர்களே, பயன்படுத்தப்பட்டு வந்தது. ஆனால், தற்போதைய நிலையில், டிஜிட்டல் குளுக்கோமீட்டர்கள் பயன்பாட்டில் உள்ளன. இந்த நவீனக் குளுக்கோமீட்டர்கள், இதற்குமுன் எடுக்கப்பட்ட தரவுகளைச் சேமித்து வைத்துக் கொள்ளவும், அதைப் பகுப்பாய்வு மேற்கொள்ளவும், உணவுமுறைகளால் ஏற்படும் தாக்கங்களைக் கண்டறியவும் உதவுகின்றன.
ஸ்மார்ட் செயல்திறன்
டிஜிட்டல் குளுக்கோமீட்டர்களை ஸ்மார்ட்போன் உள்ளிட்ட டிஜிட்டல் சாதனங்களை இணைப்பதன் மூலம், அதில் உள்ள தரவுகளைப் பகிர முடியும்.
மற்ற பயன்பாடுகள்
குளுக்கோமீட்டர்களின் உதவியுடன் கீட்டோனைக் கண்டறிவதோடு மட்டுமல்லாது, தனிப்பட்ட நினைவூட்டல்களை உருவாக்கிக் கொள்ளலாம்.
தொலைமருத்துவம்
தொலைமருத்துவம் என்ற வார்த்தைப் பிரயோகம், மக்களிடையே, சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. நாம் இருக்கும் இடத்தில் இருந்தே, தொழில்நுட்பத்தின் உதவியின் மூலம், மருத்துவச் சேவைகளைப் பெற உதவும் நடைமுறையே, தொலைமருத்துவம் ஆகும். விர்ச்சுவல் எனப்படும் மெய்நிகர் முறையிலான கலந்தாலோசனைகள், ரிமோட் முறையிலான கண்காணிப்பு நடவடிக்கைகள், மருத்துவ விவரங்களை, டிஜிட்டல் சேனல்களின் வாயிலாகப் பரிமாறிக் கொள்ளுதல் உள்ளிட்ட நிகழ்வுகள், தொலைமருத்துவ முறையில் அடங்குகின்றன.
மெய்நிகர்க் கலந்தாலோசனைகள்
தொலைமருத்துவ முறையின் மூலம், நாம் விரும்பும் மருத்துவ நிபுணர்களின் ஆலோசனைகளை, நாம் இருந்த இடத்தில் இருந்தே பெற முடியும். உடல் செயல்பாடுகள் பாதிக்கப்பட்டவர்கள், வெகுதொலைவில் இருப்பவர்களுக்கு, இந்த முறையானது மிகுந்த பயன் அளிப்பதாக உள்ளது.
தொலைக் கண்காணிப்பு முறைகள்
தொலைமருத்துவத்தில், குளுகோமீட்டர்கள், தொலைக் கண்காணிப்பு முறையில் ரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் கண்காணிக்க உதவுகின்றன. இதன்மூலம், நாம் மருத்துவர் அல்லது சுகாதார வல்லுநரை நேரடியாகச் சந்திக்காமலேயே, நம் மருத்துவ விவரங்களை அவர்கள் காணவும், பகுப்பாய்வு செய்யவும் வழிமுறைகளை ஏற்படுத்தித் தருகின்றன.
எளிமையான அணுகுமுறை
தொலைமருத்துவம் நோயாளிகளுக்கு அவர்களின் இருப்பிடத்திலேயே தரமான மருத்துவ சேவையை வழங்குகிறது.இது ஊரகப் பகுதிகள் மற்றும் தொலைதூரப் பகுதிகளில் உள்ள நோயாளிகளுக்கு, இனிய வரப்பிரசாதமாக அமைந்து உள்ளது.
இணையும் தொழில்நுட்பங்கள்
நீரிழிவு நோய் மேலாண்மையில், தொலைமருத்துவம் மற்றும் குளுகோமீட்டர் இணைந்து பல நன்மைகளை வழங்குகின்றன. இதன் மூலம், மேம்பட்ட தொடர்பு, தனிப்பட்ட கவனிப்பு, திறமையான சுகாதார மேலாண்மைக் கிடைக்கின்றன.
தரவுகள் பரிமாற்றம்
தொலைமருத்துவம் மற்றும் குளுகோமீட்டர்ச் செயல்பாடுகள் இணைவதன் மூலம், இதன் தகவல்கள் உடனுக்குடன் பரிமாற்றம் செய்யப்படுகின்றன. குளுகோமீட்டரை டிஜிட்டல் தொழில்நுட்பத்துடன் இணைப்பதால், சர்க்கரை அளவுகள் மருத்துவருக்கு உடனடியாகப் பகிரப்பட்டு, விரைவான பகுப்பாய்வுக்கு வழிவகுக்கிறது.
தங்குதடையற்ற தொடர்பு
குளுகோமீட்டரை, புளூடூத் அல்லது வை-பை இணைப்புடன் கூடிய ஸ்மார்ட்போன்கள், டேப்லெட்கள் அல்லது சுகாதார நிறுவனத்துடனான செயலிகளுடன் இணைப்பதன் மூலம், குளுகோமீட்டரில் எடுக்கப்படும் தரவுகளை, உடனடியாக, மருத்துவருக்கு அனுப்பி, சோதனைகளை விரைந்து மேற்கொள்ளச் செய்து, முடிவுகளை உடனுக்குடன் பெறமுடிகிறது.
மேம்பட்ட அளவிலான மெய்நிகர்க் கலந்தாலோசனைகள்
விர்ச்சுவல் எனப்படும் மெய்நிகர் அடிப்படையிலான கலந்தாலோசனைகள் மேம்பாடு அடைவதன் மூலம்,
விரிவான கலந்துரையாடல்கள் மேற்கொள்ளப்படுகின்றன
மருத்துவமுறையில் நிகழும் நெளிவு சுழிவுகள் சரிசெய்யப்படுகின்றன.
முழுமையான உடல்நலம் சார்ச் சேவைகள்
தொலைமருத்துவம் மற்றும் குளுகோமீட்டர்ச் செயல்பாடுகள் இணைவதன் மூலம், ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு அளவீடு செய்யப்படுவது மட்டுமல்லாது, கீட்டோன் அளவீடுகளும் மேற்கொள்ளப்படுகின்றன. மேலும், நாம் சாப்பிடும் உணவின் தன்மை, அதனால் ஏற்படும் பலன்களைக் கணிப்பாக, குறிப்பான்கள் உருவாக்கப் பயன்படுகின்றன.
உணவுமுறைப் பழக்கத்தில் சிறு சிறு மாற்றங்களை மேற்கொள்ளவும், குறிப்பிட்ட வகையிலான உடற்பயிற்சிகளைப் பரிந்துரைச் செய்யவும், மன அழுத்தத்தை நிர்வகிக்கக் கூடிய நுட்பங்களை மேற்கொள்வது உள்ளிட்ட முழுமையான உடல்நல ஆரோக்கியத்திற்குத் தேவையான முன்னெடுப்புகளை எடுக்க உதவுகின்றன.
நோயாளி – நிபுணர் இடையேயான மேம்பட்ட நல்லுறவு
தொலைமருத்துவம் மற்றும் குளுகோமீட்டர்ச் செயல்பாடுகள் இணைவதன் மூலம், உடல்நல ஆரோக்கியம் சார்ந்த முடிவுகளை, நிபுணரும், நோயாளியும் இணைந்தே மேற்கொள்வதற்கான வாய்ப்பை ஏற்படுத்தித் தருகின்றது.
நன்மைகள்
ஏற்றத்தாழ்வுகளுக்கு உடனடிப் பதிலுரை
இரத்தத்தில் சர்க்கரையின் அளவுகளில் நிகழும் ஏற்றத்தாழ்வுகளைச் சரிசெய்யும் விதமாக, உடனடியாக ஆராய்ந்து அதற்கேற்ற பதில் நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள, தொலைமருத்துவம் மற்றும் குளுகோமீட்டரின் ஒருங்கிணைந்த செயல்பாடுகள் உதவுகின்றன.
மேலும் வாசிக்க : மன ஆரோக்கியத்தில் நடத்தைப் பகுப்பாய்வின் பங்கு
முன்கூட்டியே முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்
நோயாளியின் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகமாக மாறுபடும் சூழ்நிலையில், அதன் அறிகுறிகள் வெளியே தெரிவதற்கு முன்பாகவே, அதற்கான எச்சரிக்கை உணர்வை, நோயாளிக்குத் தெரிவித்துவிடுகின்றன. இதன்மூலம், நோயாளி விரைந்து அதற்கான தற்காப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் அமைகின்றன.
மருந்து மேலாண்மையை மேம்படுத்துகிறது
அறிகுறிகளின் தன்மைகளுக்கு ஏற்ப, விரைந்து நிவாரணம் மேற்கொள்ளும் பொருட்டு, மருந்து மேலாண்மையை மேம்படுத்துகிறது.
மருத்துவத்துறையில் நிகழும் தொழில்நுட்ப வளர்ச்சியானது, சுகாதாரப் பராமரிப்பு விவகாரத்தில் இன்னும் அதிக முன்னேற்றங்களை உருவாக்கும் என்ற நம்பிக்கை அனைவரிடத்தேயும் ஏற்பட்டு உள்ளது. நீரிழிவு நோய்ப்பாதிப்பை நிர்வகிப்பது மட்டுமல்லாமல், உடலின் ஒட்டுமொத்த நலனுக்கும் உகந்ததாக விளங்குகிறது என்பதில் யாருக்கும் எவ்வித மாற்றுக்கருத்தும் இருக்கப்போவதில்லை.