இலக்கு சார்ந்த உடற்பயிற்சிகளின் முக்கியத்துவம்
சாத்தியமான உடற்பயிற்சி இலக்குகள் உங்கள் வாழ்க்கை முறை, திறன்கள் மற்றும் உடல் ஆரோக்கியத்துடன் உங்கள் பயணத்தைச் சீரமைக்கின்றன. சாத்தியமான இலக்குகள் குறித்து புரிந்து கொள்வது மிகவும் முக்கியமானது ஆகும். இது உடற்பயிற்சியினால் விளையும் காயங்களின் ஆபத்தைக் குறைக்கின்றது.
சாத்தியமான உடற்பயிற்சி இலக்குகள் உங்கள் தற்போதைய உடல்நிலை, கடமைகள் மற்றும் வாழ்க்கை முறையைக் கணக்கில் கொள்கின்றன.உடற்பயிற்சி இலக்குகள், உங்களுக்குச் சவாலான நிகழ்வுகளாகவும், அதேசமயம் நிறைவேற்ற கூடியதாகவும் இருத்தல் அவசியமாகும். எட்டக்கூடிய இலக்குகள் உடற்பயிற்சி திட்டத்தை அர்ப்பணிப்புடனும் பயனுள்ளதாகவும் மாற்றுகின்றன.
இலக்குகளை நிர்ணயிப்பதின் முக்கியத்துவம்
தெளிவான இலக்குகள் நிர்ணயிக்கப்படாத எதுவும் சென்று சேருமிடம் அறிவதில்லை என்ற சொற்றொடருக்கு ஏற்ப, இலக்கு இல்லாத உடற்பயிற்சித் திட்டங்கள், நமக்கு அதன்மேல் வெறுப்புணர்ச்சியையே உண்டாக்குகின்றன.
உடற்பயிற்சித் திட்டத்தில் இலக்குகள் ஏன் அவசியமாகிறது
தெளிவான இலக்குகளை நோக்கமாகக் கொண்ட உடற்பயிற்சிகளை மேற்கொள்ளுங்கள்
இலக்குகளானது, பயனுள்ள வகையிலான உடற்பயிற்சிகளை மேற்கொள்ளத் தூண்டுகின்றன.
அளவிடக்கூடிய முடிவுகளை, நிறைவேற்றக்கூடிய இலக்குகளால் மட்டுமே வழங்க முடியும்.
தெளிவாக வரையறுக்கப்பட்ட இலக்குகளே, உடற்பயிற்சியின் செயல்திறனை அதிகரிக்கின்றன.
SMART உடற்தகுதி இலக்குகளை அமைத்தல்
நிறைவேற்றத்தக்க வகையிலான உடற்பயிற்சி இலக்குகளை, SMART அளவீடுகளைப் பின்பற்றி அமைப்பதன் மூலம், உங்களின் எதிர்பார்ப்பு நிறைவேறும்.
Specific
உங்களது உடற்பயிற்சி இலக்குகள், தெளிவானதாகவும், இலக்கை நோக்கியதாகவும் இருத்தல் அவசியம் ஆகும். உடலை ஃபிட் ஆக வைத்திருப்பதை நோக்கமாகக் கொள்வதற்குப் பதிலாக, தினமும் 5 ஆயிரம் மீட்டர் ஓடுதல் அல்லது 30 புஷ் அப்கள் எடுத்தல் என இலக்கு நிர்ணயிக்க வேண்டும்.
Measurable
உடல் எடையைக் குறைப்பது தான் உங்களது இலக்கு எனில், எத்தனைக் கிலோ எடையைக் குறைக்க விரும்புகிறீர்கள் என்பதை முன்கூட்டியே திட்டமிட்டு, அதற்கேற்ப செயல்பட்டு, முன்னேற்றத்தை அளவிட வேண்டும்.
Achievable
சாத்தியமான இலக்குகளையே நிர்ணயம் செய்ய வேண்டும். உதாரணமாக, நீங்கள் இதுவரை ஓட்டப்பயிற்சியை மேற்கொள்ளவில்லை என்றால், மராத்தான் போட்டியில் கலந்துகொண்டு வெற்றிப் பெறுவது, கனவிலும் சாத்தியமாகாத நிகழ்வு ஆகும்.
Relevant
வாழ்க்கை முறை மற்றும் உடல்நலத்தேவைகளூக்குப் பொருத்தமான வகையிலான உடற்பயிற்சி இலக்குகளையே மேற்கொள்ள வேண்டும். பரபரப்பான வாழ்க்கைச்சூழலில், அதிகக் கால அளவை எடுத்துக்கொள்ளும் வகையிலான இலக்குகள், பயன் தராது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
Time-bound
இலக்குகளுக்குக் குறிப்பிட்ட காலக்கெடுவை நிர்ணயிப்பது என்பது இன்றியமையாததாகும். உதாரணமாக, உடல் எடையை, 10 பவுண்டுகள் அளவிற்குக் குறைக்க 3 மாதங்கள் கால அளவு அல்லது மராத்தான் போட்டியில் கலந்துகொள்ள ஓராண்டு பயிற்சி எனக் காலக்கெடு நிர்ணயிப்பது அவசியம் ஆகும்.
இந்த SMART அளவீடுகளை, உங்களது உடற்பயிற்சி இலக்குகளை நிர்ணயிக்கும் செயல்பாட்டில் ஒருங்கிணைக்கும் பட்சத்தில், உடற்பயிற்சிப் பயணம் நிச்சயம் வெற்றிப் பெறும்.
உடற்பயிற்சி இலக்குகளை அடைவதற்கான உத்திகள்
சீரான உடற்பயிற்சிகள், சரியான ஊட்டச்சத்து முறை, முறையான கண்காணிப்பு நடவடிக்கைகள் உள்ளடக்கிய நடைமுறையே, உடற்பயிற்சிக் இலக்குகளை அடைய உதவுகிறது.
இந்த உத்திகளைச் செயல்படுத்துவதற்கான நடைமுறைகள்
சீரான அளவிலான உடற்பயிற்சிகள்
இதய நலன், உடல் வலிமை, உடலின் நெகிழ்வுத்தன்மை அதிகரிப்பு உள்ளிட்டவைகளின் கலவையாக, உடற்பயிற்சித் திட்டம் அமைய வேண்டும். இந்த உடற்பயிற்சித் திட்டத்தைச் செயல்படுத்தும் போது, இதயத்தின் நலம் மேம்படுகிறது, தசைகளின் வளர்ச்சியின் மூலம் உடலின் நெகிழ்வுத்தன்மை அதிகரிக்கின்றது. இதன்மூலம், உடல்திறன் மேம்படுகிறது.
சரியான ஊட்டச்சத்து முறை
உடலுக்குத் தேவையான புரதங்கள், கார்போஹைட்ரேட்கள், கொழுப்புகள் ஆகியவற்றைச் சரிவிகிதத்தில் கொண்ட உணவுமுறையுடன் உடற்பயிற்சி திட்டத்தை இணைக்க வேண்டும்.உடற்பயிற்சித் திட்டங்களுக்கு ஏற்ப, உணவுமுறையை வடிவமைப்பதன் மூலம் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கப் பெறுவீர்கள்.
கண்காணிப்பு மற்றும் தேவைக்கேற்ப மாற்றங்கள்
உடற்பயிற்சித் திட்டத்தில் ஏற்படும் முன்னேற்றத்தைக் கண்காணித்து, அதற்கேற்ற வகையில் பயிற்சிகளின் தீவிரத்தை அதிகரிப்பது, உணவுமுறையை மாற்றி அமைப்பது உள்ளிட்ட மாற்றங்களை மேற்கொள்ள வேண்டும். இது உடற்பயிற்சியைத் திறம்பட மேற்கொள்வதற்கான உந்துதலை அதிகரிக்கச் செய்கின்றது.
தவிர்க்க வேண்டியவை
உடற்பயிற்சித் திட்டத்திற்கான இலக்குகளை நிர்ணயித்து அதன்படி செயலாற்றும் போது, அதன் முன்னேற்றத்தைப் பாதிக்கும் வகையிலான சில நிகழ்வுகளை எதிர்கொள்ள வேண்டி இருக்கும்.
அதுமாதிரியான நிகழ்வுகளாவன…
மேலும் வாசிக்க : உடற்தகுதி திட்டமிடலில் SMART இலக்குகளின் பங்கு
சாத்தியமான காலக்கெடு
உடற்பயிற்சி இலக்குகளுக்கு, சாத்தியமான காலக்கெடுவை நிர்ணயிப்பதன் மூலம், அதில் முன்னேற்றத்தை உணர முடியும், சாத்தியமற்ற காலக்கெடுவினால், விரக்தியும் எரிச்சல் உணர்வே மிஞ்சும்.
உடலின் மொழியைப் புரிந்து கொள்ளவும்
உடற்பயிற்சி மேற்கொள்ளும் போது, அதற்கு உங்களது உடலின் எதிர்வினையையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும். மேற்கொள்ளும் உடற்பயிற்சியின் அளவு அதிகரிக்கும் போது, உடலில் காயங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். எனவே, உடலின் நிலையை அவ்வப்போது கண்காணிப்பதும், போதிய அளவிலான ஓய்வு எடுப்பதும் முக்கியம் ஆகும்.
சாத்தியமான உடற்பயிற்சி இலக்குகளை நிர்ணயிக்கும் நிகழ்வானது, நன்கு கட்டமைக்கப்பட்ட திட்டம், அர்ப்பணிப்பு, புரிதல் உள்ளிட்டவைகளை உள்ளடக்கியது ஆகும். நடப்பில் உள்ள உடற்பயிற்சிகள், அதன் நிலை, SMART அளவீடுகளின் உதவியுடன் இலக்குகளை நிர்ணயித்தல், உடற்பயிற்சி இலக்குகளை அடைவதற்கான உத்திகளைச் செயல்படுத்துதல் உள்ளிட்ட நடைமுறைகளைச் செயல்படுத்தி, வெற்றிக் காணுங்கள், ஆல் தி பெஸ்ட்…