உடற்தகுதி திட்டமிடலில் SMART இலக்குகளின் பங்கு
உடற்பயிற்சிப் பழக்கத்தைத் துவங்குவது என்பது, மனதளவிலும், உடலளவிலும், துவக்கத்தில் கடினமானதாகவே இருக்கும். ஆரோக்கிய மேம்பாட்டிற்கும், யதார்த்தமான இலக்குகளை நிர்ணயிக்கவும் கற்றுக் கொள்ளவும் அவசியமாகிறது.
உடற்பயிற்சி இலக்குகளை எட்டுவதில் ஏதேனும் சிக்கல்கள் உள்ளனவா?
நீங்கள் உடற்பயிற்சி திட்டங்களை வகுக்கும் நடவடிக்கைகளின் போது, மனச்சோர்வுக்கு உள்ளாகலாம் அல்லது போதுமான மன உறுதித்தன்மையற்றுக் காணப்படலாம். இத்தகைய தருணங்களில், யதார்த்தமான இலக்குகளை நிர்ணயித்து, அதைப் பாதுகாப்பாக நிறைவேற்றக்கூடிய வகையிலான வழிமுறைகளை உருவாக்க வேண்டும்.
SMART இலக்குகளை நிர்ணயம் செய்யும் நடவடிக்கையானது, உங்கள் உடற்பயிற்சி திட்டத்தை உருவாக்குவதில் உள்ள முக்கிய படிநிலையாகக் கருதப்படுகிறது.
உடற்பயிற்சி இலக்குகள் அனைத்தும் எப்போதும் சமமாக உருவாக்கப்பட வேண்டும் என்ற அவசியமில்லை. சில உடற்பயிற்சி இலக்குகள், முதல் நாளிலேயே உங்களைத் தோல்வி மற்றும் விரக்தி நிலைக்கு உள்ளாக்கலாம்.
மனிதர்களின் நடத்தை உளவியலை அடிப்படையாகக் கொண்டு, SMART இலக்குகள் வடிவமைக்கப்பட்டு உள்ளன. உங்களது உடற்பயிற்சி விருப்பங்கள் எதுவாக இருப்பினும், அதை நோக்கி உங்களை நகர்த்தும் வகையில், இந்த இலக்குகள் வடிவமைக்கப்பட்டு உள்ளன.
உடற்பயிற்சித் திட்டத்தை, நீங்கள் துவங்கும்போது, உங்களது முழுக்கவனமும் அதில் செலுத்தவும், அதில் நீங்கள் வெற்றி அடைவதற்கும், SMART இலக்குகள் பேருதவி புரிகின்றன.
SMART இலக்குகள்
உடற்பயிற்சித் திட்டங்களுக்காக, நடத்தை மாற்றங்களை அடிப்படையாகக் கொண்ட இலக்குகளை அமைப்பது மற்றும் செயல்திட்டமிடலுக்கு, SMART இலக்குகள் அவசியமாகின்றன. இது தனிநபர்களின் விருப்பங்கள் மற்றும் நோக்கங்களை மையப்படுத்தவும் மற்றும் வெற்றியை அளவிடக்கூடிய வகையிலும் உள்ளன.
SMART இலக்குகள், உள்ளார்ந்த ஊக்கமளிப்பவையாக இருக்க வேண்டும். அணுகுமுறை மற்றும் தேர்ச்சி விளைவுகள் அடிப்படையில், பொருத்தமான சவாலாகவும், இந்த இலக்குகள் அமைய வேண்டும்.
Specific
SMART இலக்குகளை அமைக்கும் நிகழ்வில், தனித்தன்மை என்பது அவசியமாகின்றது. குறிப்பிட்ட வகையான இலக்குகள், எண் மதிப்பைக் கொண்டதாக உள்ளன.இதன்மூலம் வெற்றி, தோல்விகளை நீங்களே தீர்மானிக்க இயலும்.
Measurable
SMART உடற்பயிற்சி இலக்குகள், அளவிடக்கூடிய வகையினதாக இருக்க வேண்டும், அப்போதுதான், நீங்கள் மேற்கொள்ளும் திட்டங்களில் எதிர்பார்த்த முடிவு கிடைக்கிறதா என்பதைக் கண்டறிய முடியும்.
நடக்கும் தொலைவை, பீடோமீட்டர் அல்லது காலடிகளை எண்ணிக்கைக்கு உட்படுத்தும் கருவியைக் கொண்டு கணக்கிட வேண்டும். இதன்மூலம், இலக்கை அடைவதற்கான முயற்சியில், நீங்கள் எந்த இடத்தில் உள்ளீர்கள் என்பதை அளவிட இயலும்.
Attainable
நீங்கள் நிலையான உடற்பயிற்சித் திட்டத்தை இப்போதுதான் துவங்கி உள்ளீர்கள் என்றால், ஒரு மாதம் என்ற குறுகிய காலத்திற்குள்ளேயே மராத்தான் ஓடத் திட்டமிடுவது சாத்தியமான நிகழ்வு இல்லை என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். சாத்தியமான மற்றும் அடையக்கூடிய வகையிலான இலக்குகளை
அமைப்பதன் மூலம், வெற்றிப் பெறுவது உறுதிப்படுத்தப்படும்.
நீங்கள் உங்களது இலக்குகளை மிக உயர்ந்த நிலையில் அமைக்கும் பட்சத்தில், விரக்தி உணர்வை, மிக விரைவாகவே அடைந்து விடுவீர்கள். சாத்தியமற்ற இலக்குகளை அடைய நீங்கள் வெகுதொலைவிற்கு முயற்சிக்கிறீர்கள் என்றால், நீங்களாகவே, உங்களைக் காயப்படுத்திக் கொள்கிறீர்கள் என்று அர்த்தம்…
Relevant
சாத்தியமான SMART உடற்பயிற்சி இலக்குகள், நீங்கள் அடைய விரும்பும் முடிவுகளைக் குறித்து ஆராய்ந்து, அதற்கேற்ற சரியான பாதையைக் கண்டறிந்து செல்வது ஆகும்.
நீங்கள் உங்கள் உடல் ஆரோக்கிய மேம்பாட்டிற்காக, நடக்கும் தொலைவை அதிகரித்தீர்கள் என்றால், நீங்கள் சரியான பாதையில் சென்று கொண்டு இருக்கிறீர்கள் என்று அர்த்தம். அதிகத் தொலைவு நடப்பதன் மூலம், உடலில் கூடுதலாக உள்ள கலோரிகள் எரிக்கப்படுகின்றன. மன அழுத்தமானது குறைகிறது உள்ளிட்ட நற்செயல்களால் உடல்நலமும் மேம்படுகிறது.
இதேநேரத்தில், நீங்கள் தோள்வலியைப் போக்குவதற்காக, நீண்ட தொலைவு நடப்பீர்களானால், அது உங்களுக்கு நிச்சயம் பலன் தராது.
Time-bound
காலக்கெடுவை நிர்ணயிப்பது என்பது, குறிப்பிட்ட நேரத்திற்குள், உடற்பயிற்சி இலக்குகளை முடிக்க உதவும் நடைமுறை ஆகும். நீங்கள் ஒரு குறிப்பிட்ட கால அளவிற்குள் உங்களது உடற்பயிற்சி இலக்குகளை முடிக்கத் திட்டமிட்டுள்ளீர்கள் எனில், அதற்கான மாற்றங்களை நீங்கள் கட்டாயம் மேற்கொள்ள வேண்டும். அப்போதுதான், நீங்கள் இலக்கை, குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் அடைய இயலும்.
SMART இலக்குகளை அடைவதற்கான வழிமுறைகள்
எந்தவொரு விசயத்தையும் சிறிதாகத் துவங்குவதன் மூலம், தோல்வியில் இருந்து தப்பித்துக் கொள்ளலாம். உதாரணமாக, முதலில் காலையில் ஒரு ஸ்குவாட் செய்யுங்கள். அதைத் தினசரி வழக்கமாக்கிக் கொள்ளுங்கள். பின் சிறிதுநாட்கள் கழித்து, 15 நிமிட இடவெளியில், 5 ஸ்குவாட்கள் என அதன் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும்.
உடை விசயத்தில் கவனம்
உடற்பயிற்சிகள் மேற்கொள்ளும் போது, அதற்கேற்ற அளவிலான வசதியான உடைகள் மற்றும் காலணிகளைத் தேர்வு செய்ய வேண்டும். சரியான உபகரணங்களைப் பயன்படுத்த வேண்டும். தேவைப்படின் தலைக்கவசங்கள் உள்ளிட்டவைகளையும் அணிந்து கொள்ளலாம்.
காலை 10.30 மணிமுதல் பிற்பகல் 03.30 மணிவரை, சூரியனிலிருந்து வெளிவரும் புறஊதாக்கதிர்களின் அளவு அதிகமாக இருக்கும், இதன்காரணமாக, வெப்பம் அதிகரித்துக் காணப்படும். எனவே, இந்த நேரத்தில், வெளியிடங்களுக்குச் செல்வதைத் தவிரக்கவும். மீறிச் செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டால், கண்ணாடி, தொப்பி உள்ளிட்டவைகளை அணிந்து செல்ல வேண்டும்.
மேலும் வாசிக்க : தனிப்பட்ட ஊட்டச்சத்துச் சப்ளிமென்ட் திட்டங்கள்
உணவுமுறையில் கவனம்
அதிகக் கொழுப்பு மற்றும் அதிகக் கலோரிகள் உள்ள உணவு வகைகளைத் தவிர்த்து, புரதங்கள், பழ வகைகள், முழுத்தானியங்கள், காய்கறி வகைகளை, அதிகம் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
எந்தவொரு உடற்பயிற்சி திட்டத்தைத் துவங்குவதற்கு முன்பாக, அதுதொடர்பாக உங்களது மருத்துவரைக் கலந்தாலோசிக்கவும். உடற்பயிற்சி நடவடிக்கைகளில் போதிய முன்னெச்சரிக்கை மிகவும் அவசியம் ஆகும். பாதுகாப்பே முதன்மையானது என்பதை ஒருபோதும் மறந்துவிட வேண்டாம்.
உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் SMART உடற்பயிற்சி இலக்குகளை இன்றே வகுத்து, நல்வாழ்க்கையை இனிதே துவக்குவீராக….